ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… கூடுதல் பெட்டிகள் இணைப்பு… எந்தெந்த ரயிலில் தெரியுமா..?

சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு பயணிகளின் வசதிக்காக 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவித்துள்ளது .

வண்டி எண் 06063/06064 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்களில் கூடுதலாக ஒரு குளிர்சாதன மூன்று அடுக்குப் படுக்கை வசதி பெட்டியும் (மொத்தம் 6 பெட்டிகள்), ஏழு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும்.

வண்டி எண் 06729/06730 மதுரை – புனலூர் – மதுரை சிறப்பு ரயில்களில் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியும் (மொத்தம் 8 பெட்டிகள்), 2 குளிர்சாதன வசதி மூன்று அடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும்.

வண்டி எண் 06733/06734 ராமேஸ்வரம் – ஓகா (குஜராத்) – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்களில் கூடுதலாகத் தலா ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி (மொத்தம் 3 பெட்டிகள்) மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியும் (மொத்தம் 4 பெட்டிகள்) இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *