ரயில்வே டிக்கெட் முன்பதிவிற்கு ரூ.2000 கேஷ்பேக்… எப்படி பெறலாம்?…!!!

ஐஆர்சிடிசியில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.2000 வரைகேஷ்பேக் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐஆர்சிடிசியில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.2000 வரைகேஷ்பேக் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை எப்படி பெறலாம் எனப் பார்க்கலாம். ஐஆர்சிடிசிக்கு சொந்தமாக ஐமுத்ரா செயலியில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த கேஷ்பேக் கிடைக்கிறது. இதில் மொத்தமாக ரூ.5000க்கும் அதிகமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது இந்த கேஷ்பேக் நமக்கு கிடைக்கும்.
இந்த சலுகை பிப்ரவரி 28 வரை உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த செயலியின் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதியும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *