“ரயில்வேயில் யாராவது வேலை வாங்கித் தரேன்னு சொன்னா நம்பாதீங்க”…. ரயில்வே துறை அதிரடி…!!!

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி யாரேனும் கூறினால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர்கள் தேர்வு நிறுவனம் மூலம் மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ரயில்வே துறையில் பணி செய்யும் அனைவரும் அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். இதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது அவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

யாராவது ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என்று பணம் கேட்டால் தெற்கு ரயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அலைபேசி எண் 90031 60022 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *