“ரயில்களில் டிக்கெட் பரிசோதனை எளிமையாக்க”… இனி கவலை வேண்டாம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட்  பரிசோதனை எளிமையாக்கி நவீனப்படுத்தும் விதமாக கையடக்க கணினி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. வழக்கமாக முன்பதிவு பெட்டிகளில் பயண சீட்டு பரிசோதகர்கள் பயணிகளின் பயண சீட்டுகளை தங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை பார்த்து சோதனை செய்வார்கள். தற்போது இந்த பயணிகள் பட்டியல் கணினி மயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தெற்கு ரயில்வேயில் பயண சீட்டு பரிசோதனைகளுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும்.

மேலும் பரிசோதனைகளின் செயல் திறன் மேம்படும் தமிழ்நாடு கேரளாவில் 155 ரயில்களில் அமல் வரப்பட்டிருக்கிறது. இந்த வசதியை இன்னும் அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். ரயில்களில் இருக்கைகள், படுக்கைகள் விவரம் உடனடியாக முன்பதிவு மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் வழியில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு காத்திருக்கும் பயணிகள் இந்த காலி இடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த வெளிப்படை தன்மைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லா பரிசோதனை முறை பயணிகள் உள்ளிட்ட  அனைவருக்கும் பயனுள்ளதாக மாறியிருக்கிறது.

தெற்கு ரயில்வேக்கு மொத்தம் 857 கையடக்க கணினிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சென்னை கோட்டத்திற்கு 246, திருச்சி கோட்டத்திற்கு 101, மதுரை கோட்டத்திற்கு 98, திருவனந்தபுரம் கூட்டத்திற்கு 148, பாலக்காடு கோட்டத்திற்கு 140, சேலம் கோட்டத்திற்கு 124 கையடக்க கணினிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு கேரளாவில் இயங்கும் 185 ரயில்களில் 800 கையடக்க கணினிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு சோதனை அடிப்படையில் முதலில் மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ், திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

தற்போது இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 185 ரயில்களில் டிக்கெட் பரிசோதனைகள் பயன்படுத்துகின்றனர். மேலும் சேலம் கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 124 கையடக்க கணினி கொண்டு கோவை சென்னை மார்க்கத்தில் இயங்கும் முக்கிய ரயில்களின் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதனைகளுக்கு கணினி வழங்கி கணினி மையத்தை அமலுக்கு கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *