இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த செலவில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயிலில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ரயில்வே விதிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது ரயில் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடத்தை பயணிகள் குறிப்பிடுவது வழக்கம்.

இதேபோல் குறிப்பிடப்படும் ஏறும் இடத்திலிருந்து இரண்டு ஸ்டாப்புகள் அல்லது ஒரு மணி நேர தூரம் வரையில் மட்டுமே அந்த ரிசர்வ் சீட் அந்த பயணிக்கு ஒதுக்கப்பட்டதாக கருதப்படும். அதன் பிறகும் அவர் வரவில்லை என்றால் அந்த சீட் வேறு ஒரு பயணிக்க டிக்கெட் பரிசோதவரால் அளிக்க ரயில்வே விதியில் வலி உள்ளது.