இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் உறுதியாக டிக்கெட் கிடைக்கும், இதுவே மோடியின் கேரண்டி என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அகமதாபாத் மற்றும் மும்பை வழித்தடத்தில் புல்லட் ரயிலுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 290 கிலோமீட்டருக்கும் அதிகமான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. 12 ஸ்டேஷன்களில் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.