ரயிலில் அடிபட்டு 2 கால்களையும் இழந்த பரிதாபம்… உ.பி.யில் உச்சகட்ட கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கான்பூர் அருகே உள்ள கல்யாண் பூர் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெருவோர வியாபாரிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காய்கறி விற்பனையாளர்கள் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றி வருகின்றனர். அவ்வகையில் அர்சலன் என்ற தெருவோர வியாபாரியின் கடையில் இருந்த எடை கற்களை போலீஸ் தலைமை காவலர் ராகேஷ் தண்டவாளத்தில் தூக்கி வீசினார்.

இதனைக் கண்டு பதறிய அந்த வியாபாரி உடனே தண்டவாளத்தில் வீசப்பட்ட எடை கற்களை எடுப்பதற்காக விரைந்தார். அப்போது எதிரே வந்த ரயிலில் அடிபட்டு அவரது இரண்டு கால்களும் துண்டானது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோவில் 18 வயது இளைஞன் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு உதவிக்காக கதறி அழுவதையும் இரண்டு போலீசார் அவரை அழைத்துச் செல்வதையும் காண முடிகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவத்திற்கு காரணமாக இருந்த ராகேஷ் குமார் என்ற தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.