ரத்த அழுத்தம், நரம்பு நோய்கள் விரைவில் குணமாக… பீட்ரூட் ஜூஸ் இப்படி குடிங்க…!!!

தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதன்படி பீட்ரூட்டில் அதிக அளவு சத்துக்களும் பல மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளன. பீட்ரூட் சாறு 100 மில்லி அளவுக்கு எடுக்கவும். அதனுடன் கால் டீஸ்பூன் மிளகு பொடி, அரை ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது மஞ்சள் சேர்த்து கலந்து குடித்து வர உயர் ரத்த அழுத்தம் குறையும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்து குறையும். ரத்த நாளங்களில் அடைப்பை சரிசெய்யும். நரம்புகளில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது. எனவே இதனை தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது