நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த நிலையில் கமல்ஹாசன் தயாரித்திருந்தார். நல்ல வரவேற்பை பெற்று வரும் அமரன் திரைப்படம் தற்போது ப்ரீ புக்கிங்கில் வேட்டையன் திரைப்படத்தை முந்தியுள்ளது. அதன்படி ‌Book my show தளத்தின் மூலம் அமரன் படத்திற்கு 4.78 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

அதன் பிறகு வேட்டையன் திரைப்படத்திற்கு 4.7 லட்சம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். அதிகபட்சமாக விஜயின் கோட் படத்திற்கு 5.78 லட்சம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். மேலும் தற்போது வேட்டையின் திரைப்படத்தை முந்தி அமரன் திரைப்படம் ஃப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 45 கோடி வரை அப்படம் வசூல் சாதனை புரிந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.