நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை விஜய் காப்பியடித்து பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து இன்று ஊக்கத்தொகை வழங்கினார். தொகை வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. விழா நடக்கும் தொகுதி வாரியாக மாணவர்களுக்கு ஊக்கத் இடத்துக்கு வருகை தந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து வரவேற்பு அளித்தனர்.

அவர் வீட்டில் இருந்து புறப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் வெள்ளம் அவரை திக்குமுக்காட வைத்துவிட்டது. காரில் இருந்து இறங்கி விழா மேடைக்கு வருவதற்குள் ரசிகர்கள் படை அவரை திணறடித்துவிட்டனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜய் பல்வேறு கருத்துகளை கூறினார். இதே கருத்து நடிகர் ரஜினி பழைய நிகழ்வு ஒன்றில் பேசியதாக ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.