ரஜினியின் ”அண்ணாத்த”…. படத்தின் ட்ரைலர்…. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த - Newsfirst

இதனையடுத்து, நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *