ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா, கார்த்தி உதவி… வெளியான தகவல்…!!!

கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ரசிகர்களுக்கு சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் உதவி செய்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று, தற்போது ஊரடங்கு காரணமாக சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் உள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கூடாது என்பதற்காக தமிழக அரசு மக்களுக்கு உதவி செய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பல நடிகர் நடிகைகளும் தங்களால் இயன்ற உதவியை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தனது ரசிகர்களை தேர்வு செய்து நடிகர் சூர்யா 250 பேருக்கு ரூபாய் 5000 பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக் 200 ரசிகர்களுக்கு ரூபாய் 5000 பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இருவரும் ரசிகர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தி வருகின்றனர். இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *