தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது வம்சி  இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் சன் டிவியின் பிறந்த நாளை முன்னிட்டு வாரிசு திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறதாம். மேலும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பான நிலையில் பொங்கல் பண்டிகையின் போது நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேபோன்று மறுநாளில் நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.