ரசாயன தொட்டியை சுத்தம் செய்த போது…. 3 தொழிலாளிகள் உயிரிழப்பு…. சோகம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் தானேவில் ரசாயன தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலையில் ரசாயன தொட்டிக்கு வண்ணம் தீட்ட 3 தொழிலாளர்கள் ஒப்பந்தம் ஆனார்கள். அவர்கள் வண்ணம் தீட்டும் பணியை முடித்த பிறகு முதலாளி அவர்களிடம் தொட்டியை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளனர். அதன்படி ரசாயன தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது மூச்சுத் திணறி உயிரிழந்தார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தொட்டியில் இறந்து கிடந்த 3 தொழில் சடலமாக மீட்டனர். தற்போது ஒப்பந்ததாரர்கள் இடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.