“அதுக்காகத் தான் இதை காய்ச்சினோம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் மறைமுகமாக வீட்டில் சாராயம் காய்ச்சி  விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு அதேப் பகுதியில் எலந்தங்குளி கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் சக்திவேல் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த  சக்திவேல் மற்றும் அவருக்கு துணையாக இருந்த  மணிகண்டன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து ஏற்கனவே காய்ச்சி வைக்கப்பட்ட  15 லிட்டர் சாராயம் மற்றும்  4 பேரல்களில் இருந்த சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின்அவர்களிடம்விசாரணை நடத்திய போது தேர்தல் நேரத்தில்  சாராயம் விற்பனை  செய்வதற்காக  இதனை காய்ச்சியுள்ளோம் என்று  காவல் துறையினரிடம் கூறியுள்ளனர்.  இதனையடுத்து இருவரையும் கைது செய்த இருவரையும் அரியலூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.