இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அருகம்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும் செங்கல்பட்டில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பி என் ஒய் எஸ் இடங்கள் உள்ளது. மொத்தம் 17 தனியார் கல்லூரிகளில் 1550 இடங்கள் உள்ளன.

இந்நிலையில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இந்த படிப்புக்கு நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அண்மையில் நடந்து முடிந்தது. அதில் அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு கீழ் 350-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களை சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்