யோகாவில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த மாணவன்…. “ரெக்கார்டு புக் ஆஃப் இந்தியா புத்தகத்தில் இடம் பிடித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்”…!!!!

கீழக்கரையை சேர்ந்த மாணவன் யோகாவில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் இருக்கும் வடக்கு தெருவில் வசித்து வரும் இம்பாலா சுல்தான் என்பவரின் மகன் இன்சாப் முகமது. சிறுவன் கொடைக்கானலில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகின்ற நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆஃப் இந்தியா புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

முன்னதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனைபடைத்த நிலையில் அதை முறியடிக்கும் விதமாக ஒரு மணி நேரம் 11 நிமிடம் 14 விநாடிகள் யோகநிலையில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்திருக்கிறார். தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவனுக்கு கீழக்கரை நகர் மன்ற தலைவர், துணைத்தலைவர், நாசா சமூக நல அமைப்பினர் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *