யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்…. ரகசியம் பாதுகாக்கப்படும்….சிபிசிஐடி போலீசார் உறுதி….!!!!

சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் கெபிராஜ். இவர் போரூரை அடுத்த கெடிலப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணிபுரிந்த போது, அங்கு படித்த ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 நாட்கள் இவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.அதன்பிறகு இவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி 9498143691 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது [email protected] என்ற ஐடி மூலமாகவோ புகார் அளிக்கலாம். கெபிராஜ் மீது புகார் அளிப்பவர்கள் இன் ரகசியம் பாதுகாக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *