யார் வந்தாலும் அவ்வளவுதான்… “இது வாழ்வா… சாவா…. போர்”… ரஷ்ய அதிபர் புதின்..!!

இந்தப் போர் வாழ்வா… சாவா என்ற நிலையில் நடைபெறுகிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்..

ரஷ்யா – உக்ரைன் இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி நகரமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளுக்கு ரஷ்யா தங்களது படைகளையும் அனுப்பி வைத்தது.

இதனால் உக்ரைனின் அரசுப் படைகளின் மீது ரஷ்ய ராணுவ வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் படை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.. மேலும் அவர் உக்ரேன் ஆதரவாளர்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது உக்ரைனின் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ் கை தாக்கி வருகிறது ரஷ்யா.. அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலில் உயிரிழப்பவர்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு. இந்த போரால் அதிக அளவில் உயிரழப்பு ஏற்படும் என்று கண்டனத்தை தெரிவித்திருந்தார்.அதேபோல நோட்டா அமைப்பும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் ரஷ்யாவின் குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத அளவில் பேரழிவை சந்திப்பர்.. இந்தப் போர் வாழ்வா… சாவா என்ற நிலையில் நடைபெறுகிறது என்று  ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.. மேலும் உக்ரைனில் உள்ள ராணுவம் மற்றும் விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடைபெற்று வருகிறது என்றும், உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லை என்றும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது.