யார் இப்படி பண்ணது….”மர்மமான முறையில் உயிரிழந்த பார் நடன கலைஞர்”… போலீஸ் விசாரணை..!!

மும்பையை சேர்ந்த சாரா என்ற நடனக் கலைஞர் பெங்களூரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மும்பையை சேர்ந்த பார் நடன கலைஞர் சாரா இவர் ஆரம்ப காலத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்தார். சகோதரியின் திருமணத்திற்கு பின்பு நண்பருடன் வசித்து வந்துள்ளார். அவரது சகோதரிக்கும் சகோதரருக்கும் போன் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார், ஆனால் நேற்று நீண்ட நேரமாகியும் அவர் போன் செய்யாததால் சகோதரியின் கணவர் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார்.

அங்கு அவரும் அவரது நண்பரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு சகோதரியின் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு சாரா கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அவரது சகோதரிக்கு தகவல் அளித்தது. இந்த கொலை சம்பவம் குறித்து ஆர் டி நகர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.