“யாரும் பசியோடு செல்ல வேண்டாம்… நாங்க இருக்கோம்”…. இந்திய ரயில்வேயின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…!!!

கொரோனாவுக்கு பின்னர் இந்திய ரயில்வே பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை நிறுத்தி வைத்திருந்தது, தற்போது மீண்டும் அனைத்து சேவைகளையும் தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணங்கள் இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் இருக்கும்போது இனி யாரும் ரயில் பயணத்தின் போது பசியோடு செல்ல வேண்டியது இருக்காது என்றும், நீண்ட பயணமோ குறுகிய பயணமோ உங்கள் ரயில் பயணத்தின் போது மிக எளிதாக உணவை ஆர்டர் செய்து தர முடியும், எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ரயில் பயணிகள் ரயில்வேயின் இணையதளத்தை பயன்படுத்தி இந்த சேவையை அணுகலாம் என்றும் இதன் மூலம் அவர்கள் இருக்கைக்கு உணவு வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *