சமூக வலைதளமான youtube-ல் கடந்த 2024 ஆம் ஆண்டு டெய்லர் அக்கா உட்பட பல அக்காக்கள் ட்ரெண்டிங்கில் இருந்தனர். அந்த வகையில் தற்போது TVK அக்கா என்பவர் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அதாவது சட்டக்கல்லூரியில் படித்த வைஷ்ணவி என்பவர் சமூக ஆர்வலர். இவர் கல்லூரியில் படிக்கும் போது குழந்தைகள் உட்பட பலருக்கும் உதவிகளை செய்து வந்தார். இவர் இதுவரை எந்த கட்சியிலும் இணையாத நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது மற்றும் உறுப்பினர் அட்டை பெறுவது போன்ற விவரங்களை வெளியிடுகிறார்.

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் பெரியார் தான் எங்களுடைய கொள்கை தலைவர் என்று கூறினார். பெரியார் சொன்ன கருத்துக்கள் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு பெரிய பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பலருக்கும் பெரியாரின் கருத்துகள் மீது தாக்கம் அதிகம். அந்த வகையில் விஜய் பெரியார் பற்றி தன்னுடைய முதல் மாநாட்டில் பேசிய நிலையில் இளைஞர்கள் மத்தியில் அது மிகப்பெரிய ஊக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்கத்தினால் தான் வைஷ்ணவியும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து மக்கள் நல பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் இவர் இணையதளத்தில் TVK அக்கா என்ற ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில் தற்போது இவரை பற்றிய தகவல்களை வீடியோவாக பார்ப்போம். இதோ அந்த வீடியோ,