யாருக்கு எத்தனை சீட்…. சர்வே முடிவு இதோ…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் யாருக்கு எத்தனை சீட் என்று கட்சி வாரியாக ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளியிட்டுள்ளது. திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 19, மதிமுக 5, சிபிஐ 4, சிபிஎம் 2 ,விசிக 2, ஐயூஎம்எல் 2, கொமதேக 1, தவாக 1, பார்வர்ட் பிளாக் 1, மமக 1 தொகுதியில் வெற்றி பெறும். அதிமுக 48, பாமக 2, புரட்சி பாரதம் 1 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.