யாருக்கும் அஞ்ச மாட்டேன்… என்ன செய்வீங்க?… ராகுல் காந்தி அதிரடி டுவிட்…!!!

பொய்யை உண்மையுடன் வெல்லும் போது வரும் எல்லாத் துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலதில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் டெல்லி நோய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.ஆனால் போலீசின் தடையை மீறி ராகுல் காந்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் இழுத்துப் பிடித்து கீழே தள்ளினர். அதில் நிலைதடுமாறிய ராகுல்காந்தி தரையில் விழுந்தார்.அதன்பிறகு அப்பகுதியிலிருந்து பாதுகாவலர்கள் உதவியுடன் ராகுல்காந்தி தரையிலிருந்து மேலே தூக்கப்பட்டார். அவரின் உடலில் ஏற்பட்ட காயங்களைக் கண்டு பிரியங்கா காந்தி பெரிதும் பதற்றம் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராகுல் காந்தியுடன் வந்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் பெரும் ஆவேசம் அடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை கீழே தள்ளிவிட்டு அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளையொட்டி  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உலகில் உள்ள எவருக்கும் நான் அஞ்ச மாட்டேன். எவருடைய அநீதிக்கும் நான் ஒரு போதும் தலை வணங்க மாட்டேன். அனைத்து பொய்களையும் உண்மையுடன் வென்று காட்டுவேன். பொய்களை எதிர்கொள்ளும்போது வரும் அனைத்து துன்பங்களையும் என்னால் கட்டாயம் தாங்க முடியும்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் உத்திரபிரதேச மாநிலம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *