“யசோதா” திரைப்படம்…. ஓடிடி ரிலீஸ் எப்போது?…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

டைரக்டர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கும் திரைப்படம் “யசோதா”. பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். திரில்லர் வகை கதை அம்சம் உடைய இத்திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தன் ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளார்.

மணிஷர்மா இசையமைத்துள்ள இந்த படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படம் வெளியாகிய 10 நாட்களில் ரூபாய்.33 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் யசோதா படம் வரும் டிசம்பர் 9ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது.