மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெய்ஷல்(24) என்பவர் தனது நண்பரான சபிபுல்லா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் கேரளா கூடலூர் மலைப்பாதையில் கீழ் நடுவானில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதனால் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்ஷல் பரிதாபமாக இறந்துவிட்டார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *