மோட்டார் சைக்கிள்- மொபெட் மோதல்…. காவலாளி பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மொபட் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான சுந்தர்ராஜன்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர்ராஜன் தனது உறவினரான ஆனந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குன்னம் சென்றுவிட்டு வேப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர்கள் வேப்பூர் ராஜீவ் காந்தி நகர் அருகே சென்றபோது ரஞ்சிதம் என்பவர் ஒட்டி வந்த மொபட் சுந்தர்ராஜனின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் படுதாாயமடைந்த சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரஞ்சிதம், ஆனந்த் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீது அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *