மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது நண்பரான கார்த்தி என்பவரோடு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஊசிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த டிராக்டரும் பலமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *