மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநரான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீபக் கல்லாங்காடு புதூர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் தீபக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதனால் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தீபக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *