மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உஸ்தலப்பள்ளி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சந்திரசேகர், மணி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் மேலுமலை அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதனையடுத்து படுகாயமடைந்த சந்திரசேகர் மற்றும் மணி ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *