மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள பாறைப்பட்டி பகுதியில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் அழகு நாச்சியார் புரம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் வேலுச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *