மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லை கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிமடம் பகுதியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது ஜெயம்கொண்டம் நோக்கி வேகமாக சென்ற கார் ரவிச்சந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிச்சந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *