மோடியை கைநீட்டி சொன்னதுண்டா ? பாஜகவுக்கு இனி உப்புமா வேண்டாம்…. ராதாரவி கலகல பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, மோடிஜி அவர்கள் எப்போதுமே கட்சியை வளர்க்க வேண்டும், பெருசாக்க வேண்டும், அப்படி நினைப்பதை விட இந்தியா சிறந்த நாடக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனிதர். ஓட்டுக்காக கட்சி நடத்துபவர் அல்ல, நாட்டுக்காக கட்சி நடத்துபவர் தான் மோடிஜி அவர்கள். இதை மனதில் வைத்து என்னை போன்றவர்கள் எல்லாம் வந்ததுக்கு காரணம் இது தான். நாங்களெல்லாம் இதுவரை திராவிடத்தில் இருந்து தேசியத்திற்கு வந்ததற்கு காரணமே இதுதான்

எதுக்குன்னா நல்ல ஒரு அறிவாளி, நாட்டை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், உலக அளவில் இந்தியா என்றால் அத்தனை பேருக்கும் தெரியக்கூடிய அளவிற்கு செய்து கொண்டிருக்கிறார். அதனால் தயவு செய்து உங்கள் பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன், கராத்தே தியாகராஜன் சொன்னார் கரண்ட் இல்ல, அடுத்து மீட்டிங் போடுவிங்கன்னு, எந்த நேரத்திலும் உங்களை சந்திக்கக்கூடிய திராணி உள்ளவர்கள் பிஜேபி மட்டும் தான் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள், வேற இயக்கம் கிடையாது.

ஏனென்றால் இதுவரைக்கும் ஐயா மோடி மேல ஒரு ஊழல் குற்றசாட்டு யாரவது கைநீட்டி சொன்னது உண்டா ? வந்த ஒரு 6 மாதத்திற்குள் ஊழல் குற்றசாட்டை  சொல்லிகொள்கிறேன். இங்கே நாம் ஒன்றாக சேர்த்திருக்கிறோம், நான் என்ன காட்டு கத்து கத்தினாலும் சரி , நீங்கள் திருந்தினால் தான் நாடு திருந்தும். ஏனென்றால் ஒருவன் அலுவலகத்தில் போய் சொன்னான்….  எப்ப பாரு என் பொண்டாட்டி சமையல் குறிப்பே பார்த்துகொண்டு இருக்கிறாள் டிவியில்…. வேற எதையும் பார்க்க மாட்டேங்குறானு…

ஆனால் சாயங்காலம் போய், இரவு என்ன சமையல் செய்திருக்கிறாய் என்று கேட்டா உப்புமா செய்திருக்கிறேன் என்று சொல்கிறாள், இந்த உப்புமா செய்வதற்கா காலையில் இருந்தே சமையல் குறிப்பை பார்த்துக்கொண்டு இருப்பாள். இதை எதுக்கு சொல்கிறேன் என்றால், தினமும் நாங்க கத்துறோம், நாங்க எவ்வளவு கத்தினாலும் கூட தேர்தலில் நீங்க உப்புமா தான் கிண்டி குடுக்குறீங்க நமக்கு. ஆக எதிர்காலத்தில் உப்புமா கிண்டி கொடுக்காமல், ஏனென்றால் உப்புமாவை கிண்டி கொடுத்தால் உங்கள் வாழ்க்கை தான் தராதரம் தெரியாமல் கீழே போகும்.

மக்கள் வாழ்வதற்காக எதையும் செய்யவில்லை.  இப்போ கூட வெள்ளம் அடித்தது தண்ணீரை எப்படி குறைப்பது என்று யாரும் பார்க்கவில்லை, வெள்ளத்தை எப்படி குறைப்பது என்று யாரும் பார்க்கவில்லை, சாப்பாடு கொடுத்தார்கள் 3 வேளைக்கு அதை இல்லை என்று சொல்லவில்லை. அதுக்கு எங்க தலைவரே பாராட்டு சொன்னாரு. சோறு போட்டு பிரயோஜனம் இல்ல, நிரந்தர தீர்வு காண முடியவில்லை, நிரந்த தீர்வு வேண்டுமென்றால், அதற்கு பிஜேபி தான் ஆட்சிக்கு வர வேண்டும். இதை மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *