மோடிஜி நிறைய “பேய்களுக்கு” உதவி செஞ்சிருக்காங்க…. உளறிய நமீதா…. அலறிய மக்கள்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் காரைக்கால் தேர்தல் பிரச்சாரத்தில் நமீதா பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மோடிஜி முத்ரா திட்டத்தை கொண்டி வந்து மூலம் நிறைய பேய்களுக்கு உதவி செய்தார். தாமரைக்கு ஓட் போடுறதுனாலே, ஒரு குடும்பத்துக்கு 6 சிலிண்டர்ஸ் கொடுக்க போகிறோம். அது இலவசமாக” என்று பேசியுள்ளார். நமீதாவின் இந்த தமிழ் பேச்சால் ஒட்டுமொத்த தொண்டர்களும், பொதுமக்களும் அரண்டு போயுள்ளனர்.