பெங்களூருவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பார்ட்டி நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டார்கள். அப்போது அதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். போதையில் அங்கு இருந்த அனைவருமே போதை பொருட்கள் பயன்படுத்தினார்களா? என்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட்ட 86 பேர் போதை பொருள் உட்கொண்டது தெரிய வந்தது.

இந்த பார்ட்டியில் 73 ஆண்கள் 30 பெண்கள் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இவர்களிடம் நடத்திய ரத்த பரிசோதனையில் 59 ஆண்களும் 27 பெண்களுக்கும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதனையடுத்து  சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும் படி உத்தரவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிறந்த நாள் விழா பார்ட்டி என்ற போர்வையில் அதிகாலை 2 மணி வரையும் இந்தபார்ட்டி  நடைபெற்றதால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார்கள்.