தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி, நகர அமைப்பு ஆகிய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவித்துள்ளது. மொத்தம் 1083 பணியிடங்களுக்கான இந்த தேர்வு மே 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்குக் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மார்ச் நான்காம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு மார்ச் ஒன்பதாம் தேதி நள்ளிரவு இரவு 12 மணி முதல் மார்ச் 11ஆம் தேதி இரவு 11:59 மணி வரை விண்ணப்பங்களை திருத்தம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தேர்வானது காஞ்சிபுரம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது