இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் வித்தியாசமானதாகவும் சில வீடியோக்கள் பயனர்களை ரசிக்க வைப்பதாகவும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்த ஒருவர் மொட்டை மாடியில்  அமர்ந்து ரொட்டி சுடுகிறார்.

இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த ஒரு பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன் வேடம் அணிந்த  ஒருவர் மொட்டை மாடியில் ரொட்டி போட்டு அடுப்பில் வைத்து சுட்டு எடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் ஸ்பைடர் மேன் அம்மா வீட்டில் இல்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பயனர் ஸ்பைடர் மேன் வீட்டில் வேலை பார்க்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இப்படி பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.