மே 27 ஆம் தேதி… நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகப்போகும் பா.இரஞ்சித் படம்…. படக்குழு அறிவிப்பு…..!!!!

“பரியேறும் பெருமாள்”, “குண்டு,ரைட்டர்”, “குதிரைவால்”, “சார்பட்டா பரம்பரை” ஆகிய திரைப்படங்களை இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்து இருந்தது. அந்த வரிசையில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையைத்தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் சேத்துமான் ஆகும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு பிந்து மாலினி இசை அமைத்திருந்தார். அதாவது கிராமத்து தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையேயுள்ள பாசப் போராட்டத்தை விவரிக்கும் கதைக்களமாக இந்த படம் அமைந்தது.
சமீபத்தில் கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக “சேத்துமான்” திரைப்படம் தேர்வாகி இருந்தது. அதேபோன்று தமிழகத்தில் நடந்த 19வது சென்னை திரைப்பட விழாவில் இந்த படம் 2-வது விருதைப் பெற்றது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற மே மாதம் 27 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைபடத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்து உள்ளார். சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *