ஐபிஎல் அல்லது வேறு உலக நாடுகளிலும் கூட கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திலேயே ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டு வீரர்களை நெருக்கமாக காண ஆசைப்பட்டு பலத்த பாதுகாப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் வீடியோக்களை இணையத்தில் பார்த்திருப்போம். அவை எல்லாம் அந்த இடத்தில் சட்டென்று கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்கள் செய்த காட்சிகளாக இருந்திருக்கும். ஆனால் தற்போது இளைஞர் ஒருவர் சொல்லி வைத்து மே 18ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான போட்டி நடக்கும் போது நான் மைதானத்திற்குள் செல்வேன் என்று சேலஞ்ச் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் இந்த ஐபிஎல் சீசனில் நான் மே 18ஆம் தேதி நடக்கவிருக்கும் சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது நான் மைதானத்திற்குள் இறங்கி ஓட உள்ளேன் என தெரிவித்துள்ளார். சிலர் நான் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள ரச்சின் ரவீந்திரநாத் போல் இருப்பதாக தெரிவித்தனர். இது எனக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. இந்த சவாலை நான் வெற்றிகரமாக முடிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பாக ஸ்டேடியத்திற்கு சென்றிருந்தேன். அங்கு மிகவும் கூர்மையான தடுப்பணைகள் இருப்பதை நான் கண்டதும் இந்த சவாலை செய்வது கடினம் என்று நினைத்தேன்.

ஆனால் மைதானத்தின் இரண்டு இடங்களில் தடுப்பணைகள் எதுவும் இல்லாமல் இருப்பதை நான் கண்டேன். பிறகு நீண்ட முயற்சியின் காரணமாக சிலரின் உதவியால் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் அமர்வதற்கான டிக்கெட் எனக்கு கிடைத்துள்ளது. எனவே மே 18 அன்று காத்திருங்கள் நான் மைதானத்திற்குள் ஓடுவதை பார்க்க என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பத்திரிகை நிறுவனங்கள் சில செய்தியாக வெளியிட்ட பின் அவருக்கு காவல்துறையினிடமிருந்து அழைப்பு வந்து இதை செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அது பிராங்க் கால் ஆக இருக்கலாம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று பொறுத்திருந்து பாருங்கள் என மீண்டும் மற்றொரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Nitin Sequeira (@nitinzequeira)