“மே மாதத்தில் மட்டும் 19 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை”…. மெட்டா நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!!!!!!!

மெட்டா நிறுவனத்தின் செய்தி பகிரும் தளமான whatsapp இந்தியாவில் கோடிக்கணக்கான பயணர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் இது முதன்மை தளமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் விதிகளை மீறியதாக 19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம்  தடை செய்து இருக்கிறது. பிற செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது வாட்ஸ் அப் செயலை அரட்டை அழைப்பு என அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயணர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக விதிகளை மீறும் பயணர்களின் கணக்குகளையும் நிறுவனம் அவ்வபோதும் முடக்கி வருகின்றது. இந்திய தொழில்நுட்ப விதி 2021 கீழ் நிறுவனம் தனது மே மாத அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

இது whatsapp வெளியிடும் 12 மாத அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் வாட்ஸ் அப் விதிமுறைகள் இந்திய சட்டத்தை மீறும் கணக்குகள் மீதான நிறுவனத்தின் நடவடிக்கை பற்றி whatsapp வெளியிட்ட அறிக்கை விவரிக்கின்றது. whatsapp தனது அறிக்கையில் நிறுவனம் மே மாதத்தில் மட்டும் 19 லட்சத்திற்கும் அதிகமான இந்திய கணக்குகளை தடை செய்திருக்கிறது. தளத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் பிற காரணங்களுக்காக இந்த கணக்குகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் மே ஒன்றாம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான தகவல்கள் இருக்கிறது.

வாட்ஸ் அப் மே மாதத்தில் 1.9 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவே ஏப்ரல் மாதத்தில் 1.6 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. whatsapp கணக்குகளை தடை செய்வதற்கான முக்கிய காரணம் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காதது தான். மேலும் தவறான தகவல்களை பகிர்ந்ததற்காக சில கணக்குகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. தளத்தில் போலியான செய்திகளை தடுக்க நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தவறான செய்திகளை அதிக முறை பகிரும் கணக்குகளையும் வாட்ஸ்அப் கண்காணித்து தடை விதித்து இருக்கின்றது.

மேலும் வெளிப்புற இணைப்புகளையும் அனுப்பப்பட்ட செய்திகளின் லேபிள்களையும் நிறுவனம் அவ்வபோது சரிபார்த்து வருகிறது. அப்போதுதான் போலியான செய்திகளை தடுக்க முடியும் என அந்த நிறுவனம் நம்புகிறது. இது பற்றி வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளர் பேசும்போது என்று செய்யப்பட்ட மெசேஜ் சேவைகளை தவறாக பயன்படுத்துவதில் தடுப்பதில் whatsapp முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக செயற்கை நுண்ணறிவு பிற மெய்நிகர் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான தரவு ஆய்வாளர்கள் நிபுணர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றோம். இந்த செயல்பாடுகளின் மூலமாக மட்டுமே தளத்தை பாதுகாப்பாக வைக்க முடியும் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *