மேஷம் ராசிக்கு… வாகனத்தில் பொறுமையாக செல்லுங்கள்.. மன நிம்மதி ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அனைவரிடமும் எதார்த்தமாக பழகுவீர்கள். மற்றவர்கள் சூழல் அறிந்து செயல்படுங்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். வாகனத்தில் பொறுமையாக செல்லுங்கள். இன்று புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பாக அலைச்சல் கொஞ்சம் இருக்கும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காது. கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து மனநிம்மதி ஏற்படும். சில நேரத்தில் தேவையற்ற சோதனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து லாபம் கொஞ்சம் குறையலாம். இன்று மாணவச் செல்வங்களும் பொதுமக்களும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸ் பாதிப்பு இருக்க வீட்டிலேயே நாம் இருப்பது ரொம்ப நல்லது. நாளை காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை நாம் வீட்டில் இருந்து கொண்டு அனைத்து விதமான பணிகளையும் செய்வது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொண்டால் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டும் இல்லை “ஓம் நமச்சிவாய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்க 108 முறை சொல்லுங்கள் உங்களுடைய மனம் அமைதியாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்