மேஷம் ராசிக்கு… பொறுப்புகள் ஏற்படும்.. அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்கள் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உடல்நிலை சோர்வாக இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் கூடும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்பட கூடும். வீடு பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்பட்டு வந்து சேரும். வாழ்க்கை துணையுடன் விவாதம் கொஞ்சம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரியத்தையும் கண்டிப்பாக சந்திக்க வேண்டி இருக்கும். இன்று உற்றார் உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்று  நிதி மேலாண்மை ஓரளவுதான் சிறப்பை கொடுக்கும். கூடுமானவரை இன்று ஆலயம் சென்று காரியத்தை தொடங்குவது ரொம்ப நல்லது. இன்று  மாணவச் செல்வங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. படித்த பாடத்தை எழுதிப் பார்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்