மேஷம் ராசிக்கு… எதிரிகள் இடம் மாறி செல்வார்கள்.. திறமை வெளிப்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய தனித் திறமையை வளர்த்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். எதிரிகள் இடம் மாறிச் செல்வார்கள். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாகத்தான் நீங்கள் பணிபுரிய வேண்டும். தாராள பணவரவு இருக்கும். மனைவி விரும்பிய பொருளை இன்று நீங்கள் வாங்கி கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. பணவரவு கொஞ்சம் நல்ல படியாகத்தான் இருக்கும், கவலை வேண்டாம்.

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். இன்று உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் ரொம்ப நல்லது. லாபத்தை நீங்கள் பன்மடங்கு ஈட்ட முடியும். வாகனத்தில் செல்லும்போது ரொம்ப கவனம் இருக்கட்டும். யாருக்கும் வாக்குறுதிகளை மட்டும் இன்று கொடுக்க வேண்டாம். பணம் நான் வாங்கித்தருகிறேன் என்று எந்தவித பொறுப்புகளையும் ஏற்று கொள்ள வேண்டாம். இதை மட்டும் நீங்கள் கடைபிடித்தாலே போதும்.

உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள், அது போதும். மேஷ ராசி நேயர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்பட்டாலே போதும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் கொஞ்சம் நிம்மதியாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்