“அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் மறக்க முடியாது”… பிரபல விஜய் சேதுபதி பட நடிகை ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அண்மையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜெஸி என்ற கதாபாத்திரத்தில் இலங்கை தமிழ் பெண் மதுரா நடித்திருந்தார். இவர் நடிகர் விவேக் உடன் நடித்த அனுபவம் குறித்து தற்போது பேசியுள்ளார்.

அதாவது நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட எனக்கு விவேக்குடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அந்த ஆசை தற்போது நிறைவேறி விட்டது. படப்பிடிப்பு இடைவேளை சமயத்தில் முதல்வன் படத்தில் உள்ள ஒரு வரிகளை விவேக் பியோனாவில் வாசித்துக் காண்பித்தார். அவருடன் பேசியது மற்றும் பழகியது அனைத்துமே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடங்களையும் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply