இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கன்னட சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் மிகவும் பிஸியான நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது தமிழில் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அட்டை படத்திற்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.