மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவிலிங்கை கிராமத்தில் விவசாயியான பொன்னுசாமி(40) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை பொன்னுசாமி அப்பகுதியில் இருக்கும் வயலுக்கு அருகே பசுமாட்டை மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஏரிக்கரையோரம் இருக்கும் மின்மாற்றியின் அருகே மாடு சென்றது. அப்போது இணைப்பு கம்பி மீது மாடு உரசியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *