மேதகு படக்குழுவுக்கு… ஜிவி பிரகாஷ் வாழ்த்து…!!!!

மேதகு திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது.

இந்த படத்தின் கதையை இயக்குனர் தி. கிட்டு எழுதி இயக்கியுள்ளார். கடந்த ஆண்டே தயாராகிவிட்ட இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து இந்த படத்திற்கும் அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முப்படை கட்டி ஆண்ட ஒப்பற்ற தமிழர் இனத்தின் பெருமை மாவீரர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வரலாற்றை பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள மேதகு திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *