மேட்டுப்பாளையம் – ஊட்டி… “கோடைகால சிறப்பு மலை ரயில்”… தென்னக ரயில்வே அறிவிப்பு…!!!

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயங்கி வருகின்றது. மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும். ஊட்டியிலிருந்து மதியம் 2 மணிக்கு கிளம்பி மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து அடையும். உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆனந்தமாக மலைப்பகுதியில் இருக்கின்ற இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றார்கள். தற்சமயம் ஊட்டியில் கோடை விழா நடந்து வருவதால் குளு குளு காலநிலை நிலவுகின்றது.

கோடைகாலம் என்பதால் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னக ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரயில் செயல்படும் என்று அறிவித்தது. அதன்படி சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியது. இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்திலிருந்து 9:10 மணிக்கு சிறப்பு மலை ரயில் கிளம்பி சென்றது. சுற்றுலா பயணிகள் சந்தோஷமாக பயணம் செய்தார்கள். மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சனிக்கிழமை தோறும் வருகின்ற ஜூலை மாதம் 16ஆம் தேதி வரையும், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே வெள்ளிக்கிழமை தோறும் வருகின்ற 27-ம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதி வரை 9 முறை இயங்க உள்ளது. ஊட்டியிலிருந்து 11:25 சிறப்பு மலை ரயில் கிளம்பி மாலை 4:20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து அடையும். கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. முதல் நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் பயணம் செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *