“மேடையில் கண்கலங்கி கதறி அழுத சிவராஜ்குமார்”… சமாதானப்படுத்தி ஆறுதல் சொன்ன நடிகர் பாலகிருஷ்ணா…!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார். இவர் கன்னடத்தில் நடித்துள்ள வேதா திரைப்படம் முதல்முறையாக பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆவதால் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிவராஜ்குமார் ஆர்வமாக கலந்து கொள்கிறார். அதன் பிறகு சிவராஜ்குமார் தமிழில் நடிகர் ரஜினியின் ஜெய்லர் மற்றும் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வேதா திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற போது பிரபல நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது புனித் ராஜ்குமார் பற்றிய ஒரு வீடியோ திரையிடப்பட்டது.

இந்த வீடியோவை பார்த்த சிவராஜ்குமார் தன்னை அடக்க முடியாமல் தன் சகோதரரின் மறைவை நினைத்து கதறி அழுதார். உடனே அவரது அருகில் இருந்த பாலகிருஷ்ணா நடிகர் சிவராஜ்குமாரை தோளோடு அனைத்து சமாதானப்படுத்த முயற்சி செய்தார். இருப்பினும் சிவராஜ்குமார் கண்கலங்கி அழுத பிறகு சிறிது நேரம் கழித்து தான் பழைய நிலைக்கு திரும்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் தன்னுடைய சகோதரர் மீது சிவராஜ் குமார் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று புனித் ராஜ்குமார் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.