பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி,சனி மற்றும் ஜனவரி 18ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களும் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை, ஜனவரி 18ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முனையங்களில் இருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 12 மணி வரை இயக்கப்படும். அதே சமயம் ஜனவரி 18ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களில் இருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ ரயில் காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.